லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வள்ளிமலை அருகே லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்று விட்டனர்.

Update: 2023-08-10 17:47 GMT

காட்பாடி தாலுகா வள்ளிமலையை அடுத்த பெரிய மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45),லாரி டிரைவர். வெங்கடேசன் மற்றும் இவரது மனைவி ஆகிய இருவரும் வீட்டை பூட்டிவிட்டு துக்க நிகழ்ச்சிக்காக ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சென்றுள்ளனர். இவர்களது இரு பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்