விடுதலை சிறுத்தைகள் கட்சி படிப்பகம் தீ வைத்து எரிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி படிப்பகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.;
சீர்காழி:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகே பன்னீர்செல்வம் தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி படிப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த படிப்பக கொட்டகைக்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து சென்று விட்டனர். இதில் படிப்பகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலின், ரவிச்சந்திரன், மண்டல துணை செயலாளர் பாதரக்குடி காமராஜ், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் விஜயரெங்கன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.