அரசு வழங்கிய நிலத்தை மறு அளவீடு செய்ய வேண்டும்

அரசு வழங்கிய நிலத்தை மறு அளவீடு செய்ய வேண்டும்

Update: 2023-05-26 19:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த டி.கோட்டாம்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

எங்கள் பகுதியில் கடந்த 1968-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நல வாரியம் சார்பில் ஆதிதிராவிட சமூக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசால் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் நாங்கள் வசித்து வருகிறோம்.

இதன் அருகில் கோட்டாம்பட்டி அம்மணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. கடந்த 22-ந் தேதி கோவில் நிலத்தை அளவீடு செய்த அதிகாரிகள், நாங்கள் வசித்து வரும் வீட்டின் ஒரு பாதி கோவில் நிலத்தில் இருப்பதாக தெரிவித்துவிட்டு சென்றனர். எனவே எங்களது நிலத்தை மறு அளவீடு செய்து பட்டாவில் உள்ளபடி ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்