மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் தொடங்கியது

மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் தொடங்கியது

Update: 2023-07-06 18:45 GMT

ஊட்டி

தமிழகத்தில் கடந்தாண்டு வரை ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற்று வந்தது. ஒரே நேரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் ஓய்வூதியர்களுக்கு எந்த மாதத்தில் ஓய்வூதியம் தொடங்கப்பட்டதோ அந்த மாதத்தில் வந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என அரசு அறிவித்தது.இந்த நிலையில் இந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள மாவட்ட கருவூல அலுவலகத்தில், ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் கடந்த 4-ந் தேதி முதல் தொடங்கியுள்ளது. நேர்காணலில் கலந்து கொள்ள வருகை தந்த வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவர் அனுபமா தலைமையிலான மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, பொது மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து ஆலோசனைகளை வழங்கினர்.இதன்படி இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் ஓய்வு பெற்றவர்கள் இந்த ஜூலை மாதத்தில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். அடுத்த மாதம் முதல் அவரவர் ஓய்வு பெற்ற மாதத்தில்தான் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இந்த நேர்காணலில் பங்கேற்க, முடியாதவர்களின் வசதிக்காக அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று நேர்காணல் செய்து வருகிறோம் என மாவட்ட கருவூலக அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்