உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி..!

பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

Update: 2023-12-21 15:30 GMT

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார். அதன்படி, அனைத்து திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.

அதேபோல, பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நெல்லையில் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், "நெல்லையில் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமி! நெகிழ்ந்தேன்; நெஞ்சம் நிறைந்தேன்!" என்று தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்