மறியல்செய்ய முயன்ற சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கைது

மறியல்செய்ய முயன்ற சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-26 19:32 GMT

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும், காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளான காலமுறை ஊதியம், கிராம உதவியாளர்களுக்கு இணையான மாதாந்திர ஓய்வூதியம் 6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பின்னர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை தடுத்தி நிறுத்தி கைது செய்து, தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்