மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,600 கனஅடியாக குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,600 கனஅடியாக குறைந்தது
மேட்டூர்,
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த வாரம் வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரத்து 500 கனஅடி வரை அதிகரித்தது. இந்த நிலையில் மழை குறைந்ததன் காரணமாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரத்து 500 கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 14 ஆயிரத்து 600 கனஅடியாக குறைந்துள்ளது. அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி நிரம்பி உள்ள நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து உபரிநீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.