மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது;

Update:2022-12-17 01:30 IST

மேட்டூர்,

காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை தற்போது நின்று விட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அதாவது 14-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரத்து 500 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்தானது நேற்று முன்தினம் வினாடிக்கு 14,600 கன அடியாக குறைந்தது. இது மேலும் குறைந்து நேற்று வினாடிக்கு 9,600 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணை நிரம்பி உள்ள நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்