மாவு மில் அதிபர் தீக்குளித்து தற்கொலை
குழித்துறை அருகே மாவு மில் அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
களியக்காவிளை:
குழித்துறை அருகே மாவு மில் அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாவு மில் அதிபர்
களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட குழித்துறை அடுத்த ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 51), மாவு மில் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர் கடுமையான சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் பால்ராஜ் இருந்து வந்துள்ளார்.
தீக்குளித்து தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பால்ராஜ் வீட்டில் இருந்தபோது திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.