40 ஏக்கர் தரிசு நிலத்தில் ஏற்பட்ட தீ

நச்சலூர் அருகே 40 ஏக்கர் தரிசு நிலத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

Update: 2023-08-09 19:05 GMT

விவசாய பண்ணை

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் முதலைப்பட்டி ஊராட்சியில் தோட்டக்கலை சார்பில் விவசாய பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் பல ஏக்கரில் பல வகை மரங்கள், செடிகள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்த பண்ணைக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கரில் தரிசு நிலமாக உள்ளது.

இந்த நிலத்தில் வளர்ந்து இருந்த புற்களில் நேற்று 7 மணியளவில் திடீரென தீ பிடித்து மளமளவென எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

40 ஏக்கர் நிலம் தீயில் எரிந்து நாசம்

அதன் பேரில் முசிறி தீயணைப்பு நிலைய தலைமை நிலைய அலுவலர் கர்ணன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 40 ஏக்கர் நிலம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

மேலும், அங்கிருந்த பல தென்னை மரங்களும் தீக்கிரையானது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல்ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், கிராம உதவியாளர் செந்தில் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்