விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

Update: 2023-07-05 18:45 GMT

பள்ளிபாளையம்

மொளசி அருகே உள்ள ஏமப்பள்ளி பிலிக்கல்மேடு பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். மாநில சட்ட விழிப்புணர்வு செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்து வரவேற்றார். கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தங்கவேலு வரவேற்புரை ஆற்றினார். போராட்டத்தில் உழவர்களின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். விவசாயத்திற்கு தேவையான மின்சாரத்தை தங்கு தடை இன்றி வழங்க வேண்டும், கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை ரேஷன் கடையில் மானிய விலையில் வழங்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். தகவல் அறிந்த திருச்செங்கோடு வருவாய் வட்டாட்சியர் பச்சை முத்து மற்றும் உதவி வேளாண்மை இயக்குனர் லோகநாதன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களது கோரிக்கையை கலெக்டரிடம் தெரிவிப்பதாக கூறி சென்றனர். போராட்டத்திற்கு மொளசி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்