புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு..!
புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
புதுக்கோட்டை,
மணல் குவாரிகளில் சட்டவிரோத செய ல்பாடுகளின் புகார் காரணமாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்கள் என தமிழகத்தில் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அந்த வகையில் புதுக்கோட்டையில் பிரபல தொழில் அதிபரும், மணல் குவாரி ஒப்பந்ததாரருமான முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரனின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீட்டில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அதைபோல அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் வீட்டில் நடைபெற்ற சோதனையும் நிறைவு பெற்றுள்ளது.
ராமச்சந்திரன் மற்றும் அவரது ஆடிட்டர் அலுவலகங்களில் மட்டும் அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது. மேலும் சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்கனவே கிடைத்த ஆவணங்கள் தொடர்பாக ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.