தீக்காயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

ஆரணி அருகே தீக்காயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-04-19 12:38 GMT

ிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 75), விவசாயி. இவரது மனைவி கலாவதி. இவர்களது மகள் சரிதாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் உதவிக்காக கலாவதி சென்றுவிட்டார்.

இந்த நிலையில் சாமிநாதன் வீட்டில் அப்பளம் பொரிக்கும் போது தீ அதிகமாகி முகத்திலும், உடலிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்