நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும் ஷூ கம்பெனி தொழிலாளர்கள் கோரிக்கை மனு
நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என ஷூ கம்பெனி தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
தோல் மற்றும் தோல் பொருள் ஜனநாயக தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் ஆம்பூர் அருகே சோலூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனி திவால் எனறு கோர்ட்டு அறிவித்து, தேசிய தீர்ப்பாயம் அதிகாரியை நியமித்தது. அந்த அதிகாரி தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகை எவ்வளவு என எங்களிடம் கேட்டு சமர்பித்தார். அதைத்தொடர்ந்து தேசிய தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்த பிறகும் அதனை அமல்படுத்துவதில் காலதாமதம் செய்து வருகிறது. இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருப்பதால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.