லாரியில் இருந்து குதித்த டிரைவர் பலி

லாரியில் இருந்து குதித்த டிரைவர் இறந்தார்

Update: 2022-07-29 16:30 GMT

ஆலங்குளம்:

நெல்லை - தென்காசி முதல் நெடுஞ்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆலங்குளம் தொட்டியான்குளம் அருகே 200 மீட்டர் அளவில் பாலம் அமையவுள்ளது. எனவே வாகனங்களை வேறு பாதையில் திருப்பிவிட தற்காலிகமாக குளத்தின் உள்ளே பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கான பணியில் பொக்லைன் எந்திரங்கள் மற்றும் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. தென்காசி கடப்பாகத்தியை சேர்ந்த சடையாண்டி மகன் இசக்கி (வயது 45) என்பவரும் லாரி ஓட்டி வந்தார். அவர் ஒட்டி வந்த லாரியில் மேலே சென்ற மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனால் பதறிப்போன இசக்கி லாரியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ஓடும் லாரியின் பின்பக்க சக்கரம் இசக்கியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே இசக்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இசக்கியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்