"நம்பர் 1 தமிழ்நாடு என்ற கனவு நிறைவேறியுள்ளது" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நம்பர் 1 தமிழ்நாடு என்ற கனவு நிறைவேறியுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
பால்வளத்துறை அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஆவினில் அதிமுக ஆட்சியை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அமைச்சர் நாசர் தான். ஆவினில் பல புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ஆனதும் பால் விலையை குறைத்தார் நாசர்.
ஆவின் மூலம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெற்றுள்ளனர். தும்மினால் கூட அதை படம்பிடித்து, வீடியோ எடுத்து விமர்சனம் செய்ய ஒரு கூட்டம் உள்ளது. அந்த அளவுக்கு சமூக வலைதளங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது.
அமைச்சர்களுக்கு எவ்வித இழுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில்தான் என் கவனம் உள்ளது. நம்பர் 1 தமிழ்நாடு என்ற கனவு நிறைவேறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.