மாநகராட்சி அலுவலகம் இன்று முதல் புதிய கட்டிடத்தில் இயங்கும்

நாகர்கோவிலில் புதிய அலுவலகத்தில் மாநகராட்சி அலுவலகம் இன்று (புதன்கிழமை) முதல் இயங்க உள்ளது. இதற்காக ஆவணங்களை இடமாற்றம் செய்யும் பணி தீவிரமாக நடந்தது.

Update: 2023-03-14 18:56 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் புதிய அலுவலகத்தில் மாநகராட்சி அலுவலகம் இன்று (புதன்கிழமை) முதல் இயங்க உள்ளது. இதற்காக ஆவணங்களை இடமாற்றம் செய்யும் பணி தீவிரமாக நடந்தது.

புதிய அலுவலகம்

நகராட்சியாக இருந்த நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு புதிய அலுவலகம் கட்ட ரூ.10.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பாலமோர் ரோட்டில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே ஏற்கனவே இருந்த கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. இந்த புதிய அலுவலகத்தை கடந்த 7-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த புதிய மாநகராட்சி அலுவலகம் 3 தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. கீழ் தளம் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரை தளத்தில் மேயர் அறை, துணை மேயர் அறை, மாமன்ற உறுப்பினர்கள் அறை, தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு, நிர்வாகப் பிரிவு, வரி வசூல் மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் ஆணையர் அறை, மாநகர பொறியாளர் அறை, பொறியியல் பிரிவு, கலந்தாய்வு அரங்கம், விழா அரங்கம், பொது கழிவறை ஆகியவையும், இரண்டாவது தளத்தில் மாநகர நல அலுவலர் அறை, பொது சுகாதாரப்பிரிவு, நகர திட்டமிடுனர் அறை, நகரமைப்பு பிரிவு, மாமன்ற கூட்ட அரங்கம், பொது கழிவறை ஆகியவையும், மூன்றாவது தளத்தில் தணிக்கை பிரிவு, வருவாய் பிரிவு, பார்வையாளர்கள் அமரும் இடம், பதிவறை, பொது கழிவறை ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

இன்று முதல்...

இந்த நிலையில் புதிய அலுவலகத்தில் மாநகராட்சி அலுவலகம் இன்று (புதன்கிழமை) முதல் இயங்கும் என்று மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் கூறினார். இதற்காக பழைய அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், மேஜை, நாற்காலிகள், பீரோக்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்