மாணவர்களுக்கு ரூ.2½ கோடி கல்விக்கடன் கலெக்டர் வழங்கினார்

சிவகங்கையில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில் 39 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கல்வி கடன் ஆணைகளை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார்.

Update: 2023-09-06 19:00 GMT


சிவகங்கையில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில் 39 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கல்வி கடன் ஆணைகளை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார்.

மாணவர்கள்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு கல்வி கடன் ஆணைகளை, வழங்கி கலெக்டர் ஆஷா அஜீத், பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாணவா்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்ட அளவில் இரண்டு சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, அதன் தொடக்கமாக நேற்று சிவகங்கையில் சிறப்பு கல்வி கடன் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இம்முகாமினை முன்னிட்டு 39 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே.57 லட்சம் மதிப்பீட்டில் கல்வி கடன் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர இம்முகாமில் கலந்து கொண்ட 37 மாணவர்கள் ரூ. 1.75 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற்கு புதியதாக, விண்ணப்பங்களை வங்கி அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர்.

கல்விக்கடன்

தகுதியான மாணவர்களுக்கு கடன் அனுமதி உத்தரவுகளை இரண்டு வாரங்களில் கிடைக்க செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று நாளை(வெள்ளிக்கிழமை) காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்திலும் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மற்றும் சிவகங்கை சுற்று வட்டாரத்தில் இயங்கும் 18 வங்கிகளின் மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்