பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்தார்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்தார்;

Update:2023-04-14 01:21 IST

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம் முத்துப்பேட்டை சாலையில் உள்ளது. அவரது 94-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று காலை பட்டுக்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள கவிஞர் கல்யாணசுந்தரம் சிலைக்கு மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர், தாசில்தார் ராமச்சந்திரன், நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.ஏனாதி பாலு, நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், தமிழ் சங்க செயலாளர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்