துணை கலெக்டர்களாக தேர்வான 18 பேருக்கு பணி நியமன ஆணை- முதல்-அமைச்சர் வழங்கினார்

துணை கலெக்டர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு முதல் அமைச்சர் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Update: 2022-12-20 11:36 GMT

சென்னை,

செங்கல்பட்டில் 1 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடம், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 54 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடம்; மதுரை மாவட்டம், கள்ளிக்குடியில் 2 கோடியே 79 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டம், மோகனூரில் 2 கோடியே 79 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் 3 கோடியே 82 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், சாத்தான்குளத்தில் 3 கோடியே 6 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும் மற்றும் திருச்சிராப்பள்ளியில் 2 கோடியே 59 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் 19 கோடியே 84 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவிலான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கட்டடங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக துணை கலெக்டர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு முதல் அமைச்சர் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்