மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பத்திரிகையாளர் உயிரிழந்ததின் எதிரொலி - சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

கட்டுமான பணிகளுக்கு முறையான பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-23 15:08 GMT

சென்னை:

சென்னை கந்தன்சாவடியில் உள்ள கோதண்டராமன் நகரில் வசித்து வந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 24). இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் புளியங்குடி ஆகும். முத்துகிருஷ்ணன் என்ஜினீயரிங் படித்துவிட்டு, சென்னை ஈக்காட்டுதாங்கலை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தனியார் தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

முத்துகிருஷ்ணன் நேற்று இரவு பணியை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஜாபர்கான்பேட்டையில் உள்ள காசி தியேட்டர் அருகே நடந்து சென்றபோது, அந்த வழியாக வாகனம் ஒன்று வந்தது. உடனே, சாலை ஓரத்தில் முத்துகிருஷ்ணன் ஒதுங்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த முத்துக்கிருஷ்ணனை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பல மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையின் இன்று சிகிச்சை பலனின்று உயிரிழந்ததுள்ளார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் உயிரிழந்ததின் எதிரொலியாக கட்டுமான பணிகளுக்கு முறையான பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மேலும் இரவுக்குள் அனைத்து இடங்களிலும் இரும்பு தடுப்புகள் நிறுவி அதனை புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு, சென்னை மாநகராட்சியின் பணிகளின் துணை ஆணையர் பிரசாந்த் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்