டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து முதியவர் பலி
டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து முதியவர் உயிரிழந்தார்.
வையம்பட்டி:
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன்(வயது 68). இவர் மேலும் 6 பேருடன் கொடைக்கானலில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டியை அடுத்த தனியார் திருமண மண்டபம் அருகில் சென்றபோது காரின் டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது. இதில் காருக்குள் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சுகுமாரன் வழியிலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்ப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.