ஊதியூர் மலையடிவார பகுதியில் சிறுத்தையை பிடிக்க மீண்டும் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

ஊதியூர் மலையடிவார பகுதியில் சிறுத்தையை பிடிக்க மீண்டும் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-19 13:29 GMT

காங்கயம்

ஊதியூர் மலையடிவார பகுதியில் சிறுத்தையை பிடிக்க மீண்டும் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

சீறும் சிறுத்தை

ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்ைதயை பிடிக்க வனத்துறை கடும் முயற்சி வருகிறார்கள். ஆனாலும் சிறுத்தையை பிடிக்க முடியவில்லை. கூண்டு வைத்து, கூண்டுக்குள் ஆடுகளை வைத்தும் சிறுத்தை சிக்க வைத்து விடலாம் என்று கணக்கு போட்டனர். ஆனால் அது தப்பு கணக்கு என சிறுத்தை சிக்காமல் ஆட்டம் போடுகிறது. ஆடு, மாடு, நாய் என அடுத்தடுத்து தூக்கி சென்ற சிறுத்தை எங்கு இருக்கிறது என தெளிவாக தெரியவில்லை. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்து வந்தனர். தகவல் தெரிவித்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தனர்.

இந்தநிலையில் 15 நாட்களுக்கு மேலாக சிறுத்தை குறித்த எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இதற்கிடையில் ஊதியூர் - குண்டடம் சாலையில் மலையடிவார பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் செம்மறி ஆட்டுப்பட்டியில் 3 செம்மறி ஆட்டுக்குட்டிகள் மாயமாகி உள்ளது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆடுகளை சிறுத்ைத தூக்கி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கூண்டு

மேலும் அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடம் பதிவானது உறுதி செய்யப்பட்டதால் சிறுத்தைதான் வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆட்டுக்குட்டிகளை தூக்கி சென்ற பகுதிகளில் தற்போது கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்