குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
நாகூர் புதிய பஸ் நிலையத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாகூர்:
நாகூர் புதிய பஸ் நிலையத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குண்டும்,குழியுமான சாலை
நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு தினமும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாகூரில் புதிய பஸ் நிலையத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது.
தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் பஸ் நிலையத்தில் உள்ள பழமை வாய்ந்த கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
சீரமைக்க நடவடிக்கை
குண்டும், குழியுமான சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் ெதரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகூர் புதிய பஸ் நிலையத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.