அண்ணன், தம்பியை அரிவாளால் வெட்டிய2 பேருக்கு ஜெயில்

அண்ணன், தம்பியை அரிவாளால் வெட்டிய 2 பேருக்கு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2023-03-01 21:33 GMT

நாகர்கோவில்:

அண்ணன், தம்பியை அரிவாளால் வெட்டிய 2 பேருக்கு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அரிவாள் வெட்டு

ஆரல்வாய்மொழி கணேசபுரம் பாலன்நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 36). இவர் வீடு கட்ட மாட்டு வண்டியில் மணல் கொண்டு செல்லும் தொழிலாளி. இவருக்கும், வில்லவிளையை சேர்ந்த செல்வன் என்ற பொன்செல்வன் (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 11-6-2020 அன்று பால்ராஜ், அவருடைய தம்பி ஏசுபாலனுடன் வில்லவிளையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு செல்வன் மற்றும் அவருடைய நண்பர் ஞானராஜ் (33) ஆகியோர் வந்தனர். பின்னர் 2 பேரும் சேர்ந்து பால்ராஜையும், அவருடைய தம்பியையும் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் பால்ராஜிக்கு கையிலும், ஏசுபாலனுக்கு காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

ஜெயில் தண்டனை

இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் பால்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் செல்வன் மற்றும் ஞானராஜ் ஆகிய 2 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள கூடுதல் சார்பு 2-வது நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட செல்வனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அசன் முகமது உத்தரவிட்டார். இதே போல 2-வது குற்றவாளியான ஞானராஜிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில் மூர்த்தி ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்