சிறுவன் குட்டையில் மூழ்கி சாவு

நெமிலி அருகே சிறுவன் குட்டையில் மூழ்கி இறந்தான்.

Update: 2023-08-22 19:16 GMT

நெமிலியை அடுத்த சேந்தமங்கலம், பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கவுரி (வயது 35). இவருக்கு நான்கு குழந்தைகள். இதில் கடைசி குழந்தை கபிலன் (3). இந்தசிறுவன் விளையாட சென்று வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் தாய் கபிலனை தேடிய போது அருகிலுள்ள குட்டையில் மூழ்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்