அயோத்தியாப்பட்டணம் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி

அயோத்தியாப்பட்டணம் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலியானான்.

Update: 2022-11-13 20:28 GMT

அயோத்தியாப்பட்டணம்:

அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பின்புறம், ஜீவிதா (வயது 33) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் லோகநாதன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், ஜீவிதா தனது தாயார் வீட்டில் தங்கி, காரிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மகன் ஜீவானந்தம் (12), ஏ.என்.மங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டின் அருகில் சிறுவன் பந்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது பந்து அருகில் உள்ள கரும்பு காட்டிற்கு சென்றதால், அதை எடுப்பதற்கு சென்றான். அப்போது அங்கிருந்த பாம்பு சிறுவனை கடித்துள்ளது. உடனே தாயார் ஜீவிதாவிடம் சிறுவன் பாம்பு கடித்த விவரத்தை கூறினான். உடனே அவனை சிகிச்சைக்காக ஜீவிதா காரிப்பட்டி அரசு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவன் ஜீவானந்தம், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தான். சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்