கள் மீதான தடையை நீக்க வேண்டும்

கள் மீதான தடையை நீக்க வேண்டும் பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் வலியுறுத்தல்

Update: 2023-05-30 18:45 GMT

விழுப்புரம்

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உடனடியாக கள் தடையை நீக்கி, கள்ளை இறக்கவும், பருகவும், விற்கவும் பனையேறிகளுக்கு உள்ள உரிமையை உறுதிப்படுத்த வேண்டும், சாராய பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பனையேறிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பனையேறிகள் மீது சாராய பொய் வழக்குப்பதிவு செய்யும் காவல்துறை அலுவலர்கள் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பூரிகுடிசை கிராம பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி இழிவுப்படுத்திய கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்