முகத்தில் காயங்களுடன் ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு

திருவண்ணாமலையில் முகத்தில் காயங்களுடன் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-02 16:45 GMT

திருவண்ணாமலையில் முகத்தில் காயங்களுடன் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர்

திருவண்ணாமலை அருகே அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று அதிகாலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் முகத்தில் வெட்டு காயங்களுடன் ரமேஷ் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கணவன்- மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கத்தியை எடுத்து ரமேஷ் தனக்கு தானே முகத்தில் வெட்டியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

ஆனாலும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழுமையான தகவல் தெரிய வரும். எனவே, மர்மச்சாவாக வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்