தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2023-10-22 18:45 GMT

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்பு

தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் கடற்கொள்ளையர்களை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு இந்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென் மாவட்டங்களில் இருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டு உள்ளனர். கர்நாடக மாநிலத்திலும் கடந்த 2018-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கி விரைவில் வெளியிட உள்ளனர். பல மாநிலங்களில் அந்தந்த அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்போது, தமிழகத்தில் மட்டும் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு பொறுப்பை தட்டி கழிக்க கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படும்.

நாடாளுமன்ற தேர்தல்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். மகளிர் உரிமைத்தொகையை அனைவருக்கும் கொடுப்போம் என்றார்கள். தற்போது தகுதியானவர்களுக்குதான் வழங்குவோம் என்று கூறி உள்ளார்கள். இதனை ஏற்க முடியாது. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகையை வழங்க வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் கிரானைட் எடுக்க உரிமம் வழங்கப்பட இருக்கிறது. கிரானைட் குவாரியை தனியாருக்கு கொடுக்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். இதனால்தான் பல இடங்களில் கொலை சம்பங்கள் அரங்கேறுகின்றன. முதல்-அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்.

இ்வ்வாறு அவர் கூறினார்.

----

Tags:    

மேலும் செய்திகள்