தா.பழூர் ஒன்றிய குழு கூட்டம்

தா.பழூர் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-03 18:30 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கணக்கர் அரிய தங்கம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய குழு கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்யராஜ் வரவேற்றார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்