எல்லை இல்லா 'என்டர்டைன்மெண்ட்' 'தந்தி 1' தொலைக்காட்சி உதயம்

‘தந்தி 1' என்ற புத்தம் புதிய பொழுதுபோக்கு சேனலை தந்தி குழுமம் தொடங்கியுள்ளது.

Update: 2024-05-20 09:18 GMT

சென்னை,

தினத்தந்தி நாளிதழ், தந்தி டி.வி. செய்தி தொலைக்காட்சி, ஹலோ எப்.எம். என வெற்றிக்கொடி நாட்டி வரும் தந்தி குழுமம் 'தந்தி 1' என்ற பொழுதுபோக்கு சேனலை தொடங்கி உள்ளது. இந்த சேனலை யூ டியூப், இணையதளம், செல்போன் செயலி ஆகியவற்றிலும் இலவசமாக பார்க்க முடியும்.

டிஜிட்டல் பார்வையாளர்கள் உள்பட அனைவருக்கும் தரமான பொழுதுபோக்கு அம்சங்களை தர வேண்டும் என்பதை இதயப்பூர்வமாக உணர்ந்து தரமான நிகழ்ச்சிகளை 'தந்தி 1' டி.வி. வழங்குகிறது.

தேசம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழ் நேயர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் 'தந்தி 1' டி.வி.யின் முக்கிய நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 6 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பப்படும் 'காபி வித் கடவுள்' என்ற நிகழ்ச்சி பக்தி மணத்தை பரப்பி உலகம் முழுவதும் உள்ள ஆன்மிக ரசிகர்களை மெய்மறக்க செய்யும். அதில், பாலகிருஷ்ணா, கணபதியே வருவாய், வீர ஆஞ்சநேயா ஆகிய பக்தி தொடர்கள் இடம் பெறுகின்றன.

பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஒளிபரப்பாகும் எவர்கிரீன் நெடுந்தொடர்களான இளவரசி, தாமரை, செல்லமே போன்றவை புதுப்பொலிவுடன் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் இல்லத்தரசிகளுக்கு இனிய விருந்து படைக்கவுள்ளன.

இதுபோல தினமும் இரவு 8 முதல் 9 மணி வரை தனது எல்லையை காத்திட எந்த எல்லைக்கும் போகத்துணிந்த ஒரு இந்திய மாவீரன் போரஸ் பற்றிய கதை, தினந்தோறும் இரவு 9 மணி முதல் தமிழ் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ஒளிபரப்பப்படும் சூப்பர் ஹிட் திரைப்படங்களும் நேயர்களை உற்சாகப்படுத்த உள்ளன.

இவை தவிர, திங்கட்கிழமை தோறும் 'அகல்யாபாய்' என்ற வரலாற்று தொடர், செவ்வாய்க்கிழமை தோறும் 'துளசி கேர் ஆப் கிருஷ்ணா', புதன் கிழமை தோறும் 'தெனாலிராமன்' என்ற வரலாற்று காமெடி நாடகம், வியாழக்கிழமை தோறும் 'அலாதின்' அட்வெஞ்சர் நாடகம், வெள்ளிக்கிழமை தோறும் தேவி என்ற ஆன்மிக நாடகம், சனிக்கிழமை தோறும் கருடா என்ற ஆன்மிக நாடகம், ஞாயிற்றுக்கிழமை தோறும் கர்ணா புராண தொடர் என ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு நெடுந்தொடர்களும் 'தந்தி 1' டி.வி.யில் ஒளிபரப்பாகின்றன.

இதுபோல தினந்தோறும் இரவு 7 மணிக்கு இல்லத்தரசிகளை கவரும் வகையில் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. திங்கட்கிழமைகளில், 'வாடி ராசாத்தி', செவ்வாய்க்கிழமைகளில் 'பாக்யஜாதகம்', புதன்கிழமைகளில் 'வானம்பாடி', வியாழக்கிழமைகளில் 'கூண்டுக்கிளி', வெள்ளிக்கிழமைகளில் 'பிரியாத வரம் வேண்டும்', சனிக்கிழமைகளில் 'அம்மு', ஞாயிற்றுக்கிழமைகளில் 'காயத்ரி' என எல்லைகளை கடந்து இல்லந்தோறும் உள்ள சீரியல் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது 'தந்தி 1' பொழுதுபோக்கு தொலைக்காட்சி.

தந்தி 1 தொலைக்காட்சியின் பொழுதுபோக்கு அனுபவத்தை www.thanthione.com இணையதளம் வழியாகவும், யூடியூப் மற்றும் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் உள்ளிட்ட செயலிகள் வாயிலாகவும் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்