தந்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
குன்னூரில் தந்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
குன்னூர்,
குன்னூர் மேல் கடை வீதியில் பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழா கடந்த 7-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் தேர் ஊர்வலம் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பக்தர்கள் தேரின் மீது உப்பு வீசி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
முன்னதாக வி.பி. தெரு துருவம்மன் கோவிலில் இருந்து அபிஷேக பொருட்கள் வாத்தியங்கள் முழங்க கிராமிய நடனங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது பல்வேறு கடவுள் வேடமிட்டு கலைஞர்கள் வந்தனர். முடிவில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தாசப்பளஞ்சிக அமைப்பு குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.