ராமநத்தம் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

ராமநத்தம் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்து சென்றது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2023-05-24 18:45 GMT

ராமநத்தம், 

ராமநத்தம் அடுத்த தொழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் மனைவி மஞ்சுளா (வயது 42). இவர் ராமநத்தத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். தாழம் ஓடை அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மா்மநபர்கள், மஞ்சுளாவின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்