சிவகங்கை மாவட்டத்தில் 31-ந் தேதி வரை 144 தடை

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்ைக மாவட்டத்தில் 31-ந் தேதி வரை 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-22 17:53 GMT


மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்ைக மாவட்டத்தில் 31-ந் தேதி வரை 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

144 தடை

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பிறப்பித்துள்ளார்.

நாளை (24-ந் தேதி) மருது சகோதரர்களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட நினைவு தினம் திருப்பத்தூரில் அரசு சார்பிலும், 27-ந்் தேதி அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழாவாகவும் அனுசரிக்கப்படவுள்ளது.

தேவர் ஜெயந்தி

இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவார்கள். மேலும் அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 30-ந் தேதி முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர்மதுசூதன்ரெட்டி அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்