காரிமங்கலத்தில்ஓட்டல்கள், மாம்பழ கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை

Update: 2023-05-31 05:00 GMT

காரிமங்கலம்

காரிமங்கலம் பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகள், மளிகை கடைகள், மாம்பழ கடைகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் உணவு பாதுகாப்பு துறை பணியாளர்கள் சோதனை நடத்தினர். அப்போது மாட்லாம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரியில் காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் தேதி குறிப்பிடப்படாத தண்ணீர் கேன்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 கடைகளுக்கு தலா 1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் ஓட்டல்கள், தாபாக்களில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்துதல் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அகரம் பிரிவு சாலையில் உள்ள மாங்காய் மண்டிகளில் சோதனை செய்தனர். அழுகிய நிலையில் விற்பனைக்கு வைத்திருந்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்