கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் நவசண்டி யாகம்

Update: 2023-06-09 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், நவசண்டி யாகம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், சண்டி பாராயணம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை, கலச பூஜை, சண்டி பாராயணம், லலிதா ஸகஸ்ரநாமம், குங்கும அர்ச்சனை, திருவிளக்கு பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை, கோபூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நவசண்டி மகாயாகம் ஆகியவை நடந்தன. நவசண்டி யாகத்தில் விறகு, நெய், வாசனை திரவியங்கள், நெல்பொறி உள்பட மஞ்சள் கிழங்கு, குங்குமம், புடவை, வேஷ்டி, மூலிகை பொருட்கள், அவல், வெண்கடுகு, வெள்ளை எள், பழங்கள், சந்தனக்கட்டை, கற்கண்டு உள்பட 30 வகையான பொருட்களை கொண்டு யாகம் நடத்தப்பட்டன. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்