கோட்டைவாசல் கருப்பசாமி கோவில் கொடை விழா
செங்கோட்டையில் கோட்டைவாசல் கருப்பசாமி கோவில் கொடை விழா நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை படையாச்சி தெருவில் உள்ள கோட்டைவாசல் கருப்பசாமி, சுடலைமாடசாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சி அம்மன் கோவில் கொடைவிழா நடந்தது. இதையொட்டி மகாகணபதி ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, அஷ்வ பூஜை, கன்னியா பூஜை, வாஸ்து ஹோமம், பகவதி பூஜை நடைபெற்றது.
பால்குட ஊர்வலம், உச்சிகால பூஜை, பொங்கலிடுதல், சாமபூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.