கோவில் கும்பாபிஷேக விழா

கோவில் கும்பாபிஷேக விழா

Update: 2023-06-28 18:37 GMT

சாயல்குடி

கடலாடி ஒன்றியம் இதம்பாடல் கிராமத்தில் சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீகுபேரக்கண்ணன் ேகாவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த இரண்டு தினங்களாக கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, பூர்ணா குதி நடைபெற்றது. இதைதொடர்ந்து நேற்று கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில பொதுச் செயலாளர் வேலு மனோகரன், மூத்த துணை தலைவர் செல்வராஜ், முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் ரெங்கநாதன், பரமக்குடி தொழிலதிபர் செந்தாமரைக்கண்ணன், யாதவ் மகாசபை மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் துரை, மாவட்ட தலைவர் பிரகலாதன், ராமநாதபுரம் தாலுகா யாதவ வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், இதம் பாடல் ஊராட்சி மன்ற தலைவர் மங்களசாமி, ஒன்றிய கவுன்சிலர் பிச்சை கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராமமக்கள் மற்றும் கும்பாபிஷேக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்