கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
மயிலாடுதுறையில் கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை கூறைநாட்டில் பழைமைவாய்ந்த கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் உள்ளது. பிரம்மாண்டமான புற்றுடன் கூடிய நாகதோஷம் நீக்கும் கோவிலாக விளங்கிவரும் இக்கோவிலில் ஆடித்திருவிழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் நேற்றுமுன்தினம் நடந்தது. முன்னதாக அம்பாள் உற்சவ மூர்த்திகள் கோபுர வாசலுக்கு சர்வ அலங்காரத்தில் எடுத்து வரப்பட்டனர். தொடர்ந்து, காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதி வழியாக கோவிலை அடைந்தனர். அங்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.