பகவதி அம்மன் கோவில் திருவிழா

எருமப்பட்டி அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-05-04 18:45 GMT

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் பகவதி அம்மன் கோவிலில் கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள், விசேஷ பூைஜகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் பெண்கள் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தூக்குத்தேர் நேற்று காலை நடந்தது. முன்னதாக சாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சாமியை எடுத்து வந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) பகவதி அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மாலையில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டுதலும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்