ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழும் அபாயம் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரெயில் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.
குன்னூர்,
பெஞ்சல் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் ஊட்டிகுன்னூர் மற்றும் குன்னூர்மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழும் அபாயம் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரெயில் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மலை ரெயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு தண்டவாள பராமரிப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் குன்னூர் ரெயில் நிலையம் முன்பு உள்ள தண்டவாளத்தில் பழைய மரக்கட்டைகளை அகற்றி புதிய கட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்தநிலையில் மழை காரணமாக 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் குன்னூர் - ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு இடையிலான ஊட்டி மலை ரெயில் சேவை இன்று(4.12.2024) மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.