லளிகம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழா

லளிகம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-06-08 17:28 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து சக்தி அழைத்தல், அம்மனுக்கு புடவை படைத்தல், கும்ப பூஜை ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று சக்தி கரகம் அழைத்தலும், பூ கூடைகள் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மறுபூஜை, குழந்தைகளுக்கு காதணி விழா, தீர்த்தவாரி விழா மற்றும் பக்தர்களுக்கு பிரசாத பை வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலாவுடன் கோவில் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்