கோதண்டராமர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரி

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-03-06 18:45 GMT

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வடுவூர்

திருவாரூர் மாவட்டம் வடுவூர் கோதண்டராமர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரி நடைபெற்றது. கோவிலில் இருந்து சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சாமிகள் சமேதராக வில்லேந்திய திருக்கோலத்தில் புறப்பட்ட கோதண்டராமர் பல்வேறு வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலின் பின்புறம் உள்ள சரயூ புஷ்கரணி தெப்பக்குளத்தில் எழுந்தருளினார்.

அங்கு தீர்த்த பேரருக்கு பால், மஞ்சள், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை கொண்டு தீட்சிதர்கள் அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சாமியை தலையில் சுமந்தபடி குளத்தில் புனித நீராடி தீர்த்தவாரி நடத்தினார்கள். பின்னர் தேரடி ஆஞ்சநேயருக்கு சடாரி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் மாசி மக விழாவை முன்னிட்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாசி மகத்தை முன்னிட்டு திருமக்கோட்டை சிவன் கோவில் திரி குளக்கரையில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இங்குள்ள ராமர் பாதத்திலும், தர்ப்பண மண்டபத்திலும் திரளானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு பின்பு சிவனுக்கு ஆத்மா சாந்தி பூஜை செய்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்