கோதண்டராமர் கோவிலில் லட்சார்ச்சனை
கோதண்டராமர் கோவிலில் லட்சார்ச்சனை நடந்தது.
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தையொட்டி லட்சார்ச்சனை நடந்தது. இதில் கோவிலில் உள்ள ஹயக்ரீவர் சன்னதி முன்பு சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதராக கோதண்ட ராமர் வில்லேந்திய திருக்கோலத்தில் அருள்பாலித்தார். அப்போது கோவில் தீட்சதர்கள் துளசியால் லட்சார்ச்சனை செய்தனர். யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு நிறைவாக சாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.