துர்க்கையம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

துர்க்கையம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2022-06-11 14:48 GMT

வேதாரண்யம்:-

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. இந்த கோவிலில் வேறு எங்கும் இல்லாத வகையில் துர்க்கையம்மன் தெற்கு நோக்கி நின்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும். இங்கு வைகாசி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி துர்க்கையம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்