குமாரபாளையத்தில்காளியம்மன் கோவில் திருவிழாதிரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

Update:2023-03-02 00:30 IST

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழாவானது கடந்த மாதம் 12-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினசரி காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை தொடர்ந்து கோவிலின் முன்பு 21 அடி நீளத்திலும் 4 அடி அகலத்திலும், விறகுளால் தீயிட்டு வைக்கப்பட்டிருந்த குண்டத்தில் தலைமை பூசாரி சதாசிவம் பூங்கரகத்துடன் தீ மிதித்து விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் கடந்த 15 தினங்களாக காவிரியில் புனித நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து விரதம் இருந்த பவானி, குமாரபாளையம், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓம்சக்தி, பாரசக்தி என்று கூறியபடி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தீயணைப்பு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்