திப்பிரெட்டிஅள்ளியில்வீரபத்திர சாமி கோவில் ஆடித்திருவிழாதலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Update: 2023-08-05 19:00 GMT

தர்மபுரி அருகே திப்பிரெட்டிஅள்ளியில் உள்ள வீரபத்திர சாமி கோவில் ஆடித்திருவிழா சாமி கண் திறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து பக்தர்களுக்கு கங்கணம் கட்டுதல், சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பின்னர் விநாயகர், முருகன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து காட்டு கோவில் பெரியசாமி, காளியம்மன் மற்றும் மூலமாளம்மான் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான நேற்று பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஏராளமான பக்தர்கள் அலகுகுத்தியும், மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீரபத்திர சாமிக்கு சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்குதலும், நாளை (திங்கட்கிழமை) பொங்கல் வைத்தலும், வீரபத்திர சாமி கோவில் திரும்பும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குருமன்ஸ் இன மக்கள், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்