மதுபோதையில் வாகனங்களை நிறுத்தி வாலிபர் ரகளை

ஊட்டி அப்பர் பஜாரில் மதுபோதையில் வாகனங்களை நிறுத்தி வாலிபர் ரகளை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-08-09 00:30 IST
மதுபோதையில் வாகனங்களை நிறுத்தி வாலிபர் ரகளை

ஊட்டி

ஊட்டி நகர் பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மது அருந்திவிட்டு மது பிரியர்கள் போதையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். குறிப்பாக ஊட்டி அப்பர் பஜார் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊட்டி அப்பர் பஜார் பகுதியில் மதுபோதையில் வாலிபர் ஒருவர் நடந்து வந்தார். அவர் சாலையில் படுத்துக்கொண்டு வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினார். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த வழியாக வந்த சிலர் மதுபோதையில் இருந்த வாலிபரை சமாதானப்படுத்தி சாலையோரம் கொண்டு சென்றனர். அதன் பின்னர் வாகனங்கள் சென்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மது பிரியர்கள் மது அருந்தி விட்டு அடிக்கடி இதேபோல் படுத்துக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்