சாலை விபத்தில் வாலிபர் படுகாயம்
சாலை விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 22). இவர் வேலாயுதம்பாளையத்தில் இருந்து நொய்யல் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கலையரசன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கலையரசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்ற வருகிறார். இந்த விபத்து குறித்து கலையரசனின் தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.